Showing posts with label சிலேடை. Show all posts
Showing posts with label சிலேடை. Show all posts

Wednesday, April 03, 2013

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்

படம் : ஜீன்ஸ்
பாடல் : பூவுக்குள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

Friday, March 29, 2013

நான் யார் நான் யார் நீ யார்

திரைப்படம்: குடியிருந்த கோவில் (1968)
இசை: M.S. விசுவநாதன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
======================================

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்

உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ?
வருவார் இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார் யார் யாரோ?

நான் யார்...

உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார்
தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார்
எதிர்ப்பார் யார் யாரோ ?
எதிர்ப்பார் யார் யாரோ ?

நான் யார்...

பிணியார் வருவார் மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளைக்கு யார் யாரோ?
பிறந்தார் இருந்தார் நடந்தார் கிடந்தார்
முடிந்தார் யார் யாரோ ?
முடிந்தார் யார் யாரோ ?

நான் யார்...

Wednesday, March 27, 2013

வசந்த கால நதிகளிலே

படம் : மூன்று முடிச்சு
இசை : M.s.விஸ்வநாதன்
வரிகள் : கண்ணதாசன்
குரல் : ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் & m.s.விஸ்வநாதன்

ஜெ:
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

வா:
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

ஜெ:
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வா:
தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

m.s.v:
மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்

அன்பு நடமாடும் கலை கூடமே

படம் : அவன்தான் மனிதன்
குரல் : டி,எம்,எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, மஞ்சுளா 

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

(அன்பு)
மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

(அன்பு)
வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

(அன்பு)
மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

(அன்பு)

அத்திக்காய் காய்காய்

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
இரவுக்காய் உறவுக்காய்
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்)
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ
கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா
(அத்திக்காய்)
நன்றி: அன்புடன் புகாரி