Friday, March 29, 2013

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே

படம் : இளமை காலங்கள்
பாடல் : ஈரமான ரோஜாவே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்
உன் வாசலில் எனைக் கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே…
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடிவா சிந்து

ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேலை
நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி…
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோனி

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

5 comments:

  1. இதயத்தில் புகுந்து ஏதோ செய்கிறது.இந்தியாவின் மிக சிறந்த பாடகர் K.J. யேசுதாஸ்.
    from:N.Khan.singapore.

    ReplyDelete
  2. Anonymous06:48

    The legend

    ReplyDelete
  3. Anonymous03:12

    இசை கலைஞர்களின் திறமையும் அதை வழி நடத்தும் ஞானி அவர்களும் பாடகர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.அருமை!!!

    ReplyDelete
  4. Anonymous23:17

    Unmayanna kadhal

    ReplyDelete
  5. Anonymous08:55

    If you want sleep drug listen this song.

    ReplyDelete