Friday, March 29, 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

படம் :சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

10 comments:

  1. எத்தனையோமுறை இப்பாடலை கேட்டிருந்தாலும்,திரு.சுகி சிவம் அவர்கள் உதாரணங்களை அடுக்கி ஒவ்வொரு வரியையும் வியத்தகு முறையில் விளக்கியபோது உள்ளம் நெகிழ்ந்துபோனேன். முழுப்பாடலையும் தேடிப்படித்தேன்.
    முத்துசாமி.

    ReplyDelete
    Replies
    1. Anonymous11:46

      Me to

      Delete
    2. Anonymous22:33

      Can send Sugi sivam aiyya speech about this song pls

      Delete
  2. Anonymous18:29

    ஆஹா

    ReplyDelete
  3. உருகியோடும் மெழுகை போல

    ReplyDelete
  4. கண்ணதாசன் கவிஞன் இல்லை மகாசித்தபுருசன் வணங்குகிறேன் 🙌🙌🙌🙏🙏🙏

    ReplyDelete
  5. Anonymous00:30

    ஞான கவி

    ReplyDelete
  6. Anonymous14:03

    நல்லது.மனிதனாக முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  7. Anonymous00:46

    அருமையான

    ReplyDelete