இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
படம்: இருவர் உள்ளம்.
இசை : K.v.மகாதேவன்.
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
பாடியவர்: பி.சுசீலா.
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
பாடுமா
(இதய வீணை தூங்கும் போது...)
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
செய்தானே
உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
Wednesday, March 27, 2013
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
Labels:
காதலனுக்காக
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பாடல் வரிகள்
ReplyDeleteஉருகவைக்கும் வரிகளில் பெண்ணின் நிலையை இதைவிட விளக்கிட முடியாது..!
ReplyDelete