பாடல்: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
குரல்: P b ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
(நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

அருமையான பாடல்கள்
ReplyDeleteமனிதன் நினைப்பது எல்லாம் நடந்தது விடாது.அவர்களின் செயல்களுக்கு தக்கவாறு அவரவர் வாழ்க்கை அமையும்
ReplyDeleteOne of the best meaningful song, Tamil film industries best (music,cinematography and artist)ever song.
ReplyDeleteஅடடா!என்னே அருமை......
ReplyDeleteநினைப்பதெல்லாம் நடந்துவிடும் ஈசன் கிருபையிலே
ReplyDeleteநடந்ததெல்லாம் நினைவில் வரும் எண்ணப் பதிவினிலே
பிறவித் துயர் என்றும் இல்லை இறைவன் திருவடியில்
வினைப்பயனால் அது முடிவதில்லை மனிதன் சிந்தையிலே.
(நினைப்பதெல்லாம்)
ஆயிரம் எண்ணங்கள் உதயம் அதன் பதிவுகளாலே துயரம்
ஒருநாள் வந்தோம் ஒருநாள் போவோம் என்பதை உணராதிருந்தோமே
ஈசனையே நினைந்திருந்தால் வாழ்வில் துன்பமில்லை
அவனிருக்க வேறெதுவும் நம் உயிர்க்கு துணையில்லை
(நினைப்பதெல்லாம்)
உயிரின்பயணம் எங்கே தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பதறியா திருந்தோமே
வந்த பாதைதனைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
தெளிந்த மனம் ஈசத் துவம் பெற்றால் பயணம் முடிந்துவிடும்
(நினைப்பதெல்லாம்)
அருமை
Deleteயதார்த்தமான வரிகள் வாழ்க்கையில் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டிய வரிகள் கண்ணதாசன் சார் என்றும் வாழ்வீர்கள் இந்தப் பாடல் வரிகளால்
ReplyDeleteமிக அருமையான கருத்தாழம் மிக்க பாடல்
ReplyDeleteநெஞ்சில் ஓர் ஆலயம்
ReplyDelete