Wednesday, March 27, 2013

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...

திரைப்படம்:வீரத்திருமகன்
பாடியவர்: b. ஸ்ரீநிவாஸ் , s. ஜானகி
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை:விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
காணாத கண்களை காணவந்தாள்...
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)

மேலாடை தென்றலில் ஆகாகா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல் (பாடாத பாட்டெலாம்)

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)

நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து பேசம்மா.. (பாடாத பாட்டெலாம்)

No comments:

Post a Comment