Saturday, March 30, 2013

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

 திரைப்படம் – ஆண்டவன் கட்டளை
பாடல் – ஆறு மனமே ஆறு
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி
பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்
 
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
 
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் அமைத்த நியதி
 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
  உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்


உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்


ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித உருவில் தெய்வம்


இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

16 comments:

  1. எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது . கண்ணதாசனின் எளிமையான வரிகள், அர்த்தம் , இசையோடு எப்பொழுதுமே தாலாட்டும்.

    ReplyDelete
  2. மனதிற்கு இதமான வரிகள்

    ReplyDelete
  3. மனதிற்கு இதமான வரிகள்

    ReplyDelete
  4. வம்மா வம்மா சின்னம்மா பாடல் வரிகள் கிடைக்குமா.

    ReplyDelete
  5. அருமையான வரிகள்

    ReplyDelete
  6. அனைவரும் உணர்ந்து வாழ வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  7. அனைவரும் உணர்ந்து வாழ வேண்டிய வரிகள்...

    ReplyDelete
  8. அருமை. but some mistakes in it

    ReplyDelete
  9. அன்பு கொண்ட பாடலெல்லாம்
    என் அன்பு மனதைக்குப் பிடிக்கும்
    உலக இயக்கம் அன்பு என்பது
    உணர்ந்துபார்த்தால் இனிக்கும்

    உள்ளதைச் சொன்னால் பண்பாகும்
    இதில் உரிமை கொண்டால் கசப்பாகும்
    இதில் உணரும் உரிமை உளவளத்தை
    அறியும் எனினும் மனவளத்தை பாதிக்கும்

    ReplyDelete
  10. அருமை தத்துவபாடல்
    காலத்துக்கும் ஏற்ற பாடல்
    தத்துவ மேதை கண்ணதாசன்
    அவர்களால் எழுதபட்டது

    ReplyDelete
  11. அருமையான வரிகள் நாட்டின் நடப்பைவரிகளிள் கொடுத்துள்ளார்

    ReplyDelete
  12. அற்புதமான பாடல் பதிவு

    ReplyDelete
  13. Anonymous07:18

    ஆசை கோபம் களவுக்கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்.அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

    ReplyDelete