Wednesday, March 27, 2013

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
மேள தாளம்..ஓஓஒஒ
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி... உன் தோளிலே...
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

2 comments:

  1. பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் இசைஞானி இளையராஜாவின் இசையை எண்ணி களித்திருக்கிறேன் ஆனால் எழுதியவர் எம்.ஜி.வல்லபன் என்பது மிக ஆச்சர்யமான சுவாரசியமான ஒன்று.

    ReplyDelete
  2. அருமை வரிகள் மென்மையான இசை

    ReplyDelete