படம்: நீதிக்கு தலை வணங்கு
பாடியவர்கள்: Kj ஜேசுதாஸ்
வரிகள்: புலமை பித்தன்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே
(எந்த..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
(தூக்க..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்
(ஆறு..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
பாடியவர்கள்: Kj ஜேசுதாஸ்
வரிகள்: புலமை பித்தன்
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னை சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே
(எந்த..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
தூக்க மருந்தினை போன்றவரை பெற்றவர்
போற்றும் புகழுறைகள்
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
(தூக்க..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
ஆறு கரை அடங்கி நடந்ததில்
காடு வளம் பெறலாம்
தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்ததில்
நாடும் நலம் பெறலாம்
(ஆறு..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை
(பாதை..)
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
(இந்த..)
நன்றி ஐயா நன்றி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபுலமை பித்தன் அவர்களின் அருமையான அறிவுரைகள்...
ReplyDeleteதூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் போற்றும் புகழுறைகள்...
நோய்தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்...
ப்ரமாதம்....
Excellent advice
Deleteஅருமை
Delete1989 இல் எனக்கு மகன் பிறந்தான். நான் தூலியில் இந்த பாடலை பாடித்தான் தூங்க வைப்பேன். தற்போது அவனுக்கு பெண் குழந்தை பிறந்தது இருக்கின்றது. எனக்கு இப்போதும் பாட ஆர்வமாக உள்ளது.
Deleteஎன்றென்றும் இனிக்கும் இதமான பாடல்
ReplyDeleteபுலமை பித்தன் புலமையில் சித்தன்
ReplyDeleteஎந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளன்ப்பதிலே
ReplyDeleteநான் 1வருடம் 3 மாதங்களான என் பேத்தியை காலம் சென்ற புலவர் புலமைபித்தன் ஐயாவின் பாடலை நான்பாடி தூங்க வைத்து விடுவேன்.
ReplyDeleteநீதிக்கு தலைவணங்கு படத்தில் புரட்சி தலைவர் எம் ஜீ ஆர் பாடுவதாக காட்சிவரும் இந்த பாட்டு
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஏதோ என்னுடைய குரல் வளத்தை என் பேத்தியும் விரும்பும்.
கருத்துள்ள பாடல். ..
ReplyDeleteஇப்போது என் பேத்தியை ஆறு மாதங்கள் ஆகிறது. இந்த பாடல் பாடியவுடன் முழுப் பாடல் முடிவதற்குள் தூங்கி விடுவாள். வேறெந்த தாலாட்டுப் பாடல்களிலும் அவளுக்கு தூக்கம் வராது. இந்த பாடலில் தூக்க மருந்து இருக்கிறது போலும் 😍😍😍😍 நான் மிகப்பெரிய MGR ரசிகை. புலவர் புலமைப்பித்தன் ரசிகையும் கூட 👍
ReplyDeleteமக்களுக்கு நல்லதைச் சொல்லும் பயனுள்ள பாடல்
ReplyDeleteவிழிப்புணர்வு பாடல் தூங்க வைக்கும் பாடல் அல்ல
ReplyDelete