Wednesday, March 27, 2013

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்

படம் : வேட்டைக்காரன்
இசை : K.v.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.m.s

உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)

மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்


உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

13 comments:

  1. Anonymous01:42

    அந்த வரி மாசு குறையாத அல்ல'மாற்று குறையாத" என்றுதான் வரும் மாசு என்றால் அர்த்தம் மாறிவிடும்

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி!

      Delete
    2. Anonymous22:44

      தவறை சுட்டிக்காட்டி, சரியானதையும் சொல்லி உள்ளீர்கள். நன்றி

      Delete
  2. மகிழ்ச்சி அளித்த மாலைப்பொழுது நன்றி .!

    ReplyDelete
  3. சாக்ரடீஸ் அவர்களின் தத்துவத்தை மிக அழகாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் மிக அழகாக சொல்லி உள்ளார்

    ReplyDelete
  4. this is very useful

    ReplyDelete
  5. this is very useful

    ReplyDelete
  6. this is very useful

    ReplyDelete
  7. அருமை அருமை

    ReplyDelete
  8. இது போன்ற நல்ல கருத்துக்கள் நிறைந்த பாடல்களை பதிவு செய்து வைத்து இருக்கும் அன்பருக்கு நன்றி .. வாழ்த்துக்கள் .. வாழும் தமிழ் வளர்வர் தமிழர்.

    ReplyDelete