Wednesday, March 27, 2013

பாடும் போது நான் தென்றல் காற்று

படம்: நேற்று இன்று நாளை
இசை: Ms விஸ்வநாதன்
பாடியவர்: Sp பாலசுப்ரமணியம்

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓ

எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்றுதானே

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

2 comments:

  1. 'எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்' அருமையான வரிகள்...மெய் மறந்து இரசித்தேன்.....மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete