Wednesday, March 27, 2013

அன்பு நடமாடும் கலை கூடமே

படம் : அவன்தான் மனிதன்
குரல் : டி,எம்,எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, மஞ்சுளா 

அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் மன்றமே

(அன்பு)
மாதவி கொடிப் பூவின் இதழோரமே
மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத் தோட்ட மணியாரமே
பாடும் புது ராகமே

(அன்பு)
வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே
விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே
தென்னர் குல மன்னனே
இன்று கவி பாடும் என் செல்வமே
என்றும் என் தெய்வமே

(அன்பு)
மானிலம் எல்லாமும் நம் இல்லமே
மக்கள் நம் சொந்தமே
காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே
உலகம் நமதாகுமே
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே
யாவும் உறவாகுமே

(அன்பு)

5 comments:

  1. 1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான " அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.
    இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை. மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் MSV கவிஞரை பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார். கவிஞர் கடுப்பாகி என்னடா விச்சு எப்ப பார்த்தாலும் மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட இந்தா போட்டுக்கோ பல மே என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும் மாதிரி எழுதினார் கவிஞர்.

    இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!

    ReplyDelete
    Replies
    1. மற்றுமொரு பாடல் "மே" என்று முடியுமாறு கவியரசர் எழுதியிருந்தார்.கர்ணன் திரையில் "இரவும் நிலவும் வளரட்டுமே"

      Delete
  2. நன்று.பின்நிகழ்வினை படித்த பின்பு பாடலின் மதிப்பு என்னுள் கூடிவிட்டது.

    ReplyDelete
  3. "யாதுமூரே யாவரும் கேளிர்"என்ற கணியன் பூங்குன்றனின் வரியின் பொருளை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது பாடலின் நிறைவுப் பகுதி.

    ReplyDelete
  4. கவிஞரின் பாடல்களில் இலக்கிய நயமும் இலக்கணமும் பின்னிப் பிணைந்திருக்கும். என்ன பார்வை உந்தன் பார்வை... இடை மெலிந்தாள் இந்தப் பாவை .. இந்தப் பாடலில் அந்தப் பாவையின் இடை மெலிந்தது எனவும் பொருள் வரும். "பார்வை" என்ற வார்த்தையில் உள்ள ர் என்ற இடையினம் மெலிந்து பாவை ஆனது என்ற பொருளும் வரும்.

    ReplyDelete